அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கில் 2264 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை, 78 பேருக்கு கொரோனா- மக்களை சுகாதார நடைமுறைகளை பேணி விழிப்புடன் செயற்படுமாறு அறிவிப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பி.சிஆர். பிரிசோதனையில் நேற்றைய தினம் அம்பாறையில் ஒருவரும், தெஹியத்தகண்டியில் ஒருவரும், இறக்காமத்தில் ஒருவரும், மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடியில் ஒருவரும் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்தில் 78 ஆக அதிகரித்துள்ளது.என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கொரோனா தாக்கம் தொடர்பில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கிழக்கு மாகாணத்தில் இதுவரை 2264 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ப்பட்டுள்ளது, 78 கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் தேவையற்ற விதத்தில் வீடுகளைவிட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பேணி கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 திருகோணமலை சுகாதார பிராந்தியமான குச்சவெளியில் ஒருவரும், தம்பலகாமத்தில் ஒருவரும், திருகோணமலையில் ஒருவரும், மூதூரில் 6 பேர் உட்பட 13 பேருக்கும் , மட்டக்களப்பு சுகாதார பிராந்தியமான கோரளைப்பற்று மத்தியில் 35 பேருக்கும், ஓட்டுமாவடியில் ஒருவருக்கும், கிரானில் ஒருவருக்கும், காத்தான்குடியில் ஒருவருக்கும், வெல்லாவெளியில் ஒருவருக்கும், பட்டிருப்பில் ஒருவருக்கும், களுவாஞ்சிக்குடியில் ஒருவருக்குமாக 41 பேருக்கும், கல்முனை சுகாதார பிராந்தியத்தில் பொத்துவிலில் 7 பேருக்கும், கல்முனை தெற்கில் 5 பேருக்கும் ,அக்கரைப்பற்றில் ஒருவருக்கும், சாய்ந்தமருதில் ஒருவருக்கும், இறக்காமத்தில் 4 பேருக்குமாக 18 பேருக்கும். அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் தெய்யத்தகண்டியில் 2 பேருக்கும், பதியத்தலாவையில் 2 பேருக்கும், அம்பாரையில் ஒருவருக்கும், தமணனையில் ஒருவருக்குமாக 6 பேருக்கும் கோரோனா தொற்று கண்டறியப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 எனவே பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதுடன் கொரோனா தொற்றை தடுக்க எங்களுடன் இணைந்து செயற்படுவதுடன் சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கில் 2264 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை, 78 பேருக்கு கொரோனா- மக்களை சுகாதார நடைமுறைகளை பேணி விழிப்புடன் செயற்படுமாறு அறிவிப்பு. Reviewed by Author on November 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.