அண்மைய செய்திகள்

recent
-

அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் டிஜிட்டல் கொள்கைக்கு அமைய எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி வீட்டில் இருந்தவாறே கைத்தொலைபேசி மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 

 இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வில் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். சான்றிதழ்களை உறுதிப்படுத்துதல் பெறுபேறுகளை உறுதிப்படுத்தல் உட்பட பல்வேறு சேவைகளையும் இந்த செயலியின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது.

அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி Reviewed by Author on May 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.