அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையும் அவசர சிகிச்சைப் பிரிவு(Etu) பொறுப்பு தாதிய உத்தியோகத்தரும்

மன்னார் பொது வைத்தியசாலையின் நிர்வாகமானது மிகவும் மோசமாக சீர்கெட்டுப் போயுள்ளளதென பொதுமக்களும் நோயாளிகளும் கடும் விசனம் தெரிவித்து வருகின்றனர். இங்கே எதுவும் ஒழுங்காய் திட்டமிட்டு நடந்தேறுவதில்லை என்றும் எல்லாமே தலைகீழாகவும் தாறுமாறாகவும் நடக்கின்றதென்றும் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் இங்கு பணி புரியும் சில உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் அதற்கேற்றாற்போல் மிகவும் கேவலமாகவும் இழிவாகவும் நடக்க முற்படுகின்றனர். 

 அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் பொறுப்புத் தாதிய உத்தியோகத்தரின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் காட்டுமிராண்டித்தனமாயும் காறி உமிழுமளவிற்கும் படு கேவலமாக உள்ளதாக நோயாளிகளும் பார்வையாளர்களும் அங்கு பணி புரியும் ஊழியர்களும் குறை கூறுகின்றனர். 

இதையெல்லாம் பணிப்பாளர் கவனத்தில் கொள்ள மாட்டாராவென கேள்வி எழுப்பி நிற்கின்றனர். இதை கவனத்தில் கொள்ளாத எதற்கும் லாயிக்கில்லாத கையாலாகாத பணிப்பாளர் இந்த வைத்தியசாலைக்கு அவசியம்தானா எனவும் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். அண்மையில்கூட நோயாளி ஒருவரை மிக மோசமாக உபயோகிக்கக் கூடாத- தூஷண வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

திருத்தங்கள் இல்லா விட்டால் புகைப்படம் பெயருடன் செய்தி முழுமையாக பிரசுரிக்கப்படும் 



மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையும் அவசர சிகிச்சைப் பிரிவு(Etu) பொறுப்பு தாதிய உத்தியோகத்தரும் Reviewed by Author on September 15, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.