பாடசாலை விளையாட்டு போட்டியில் ஓடிய மாணவன் மரணம்
புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் , ஓடிக்கொண்டிருந்த மாணவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் புதன்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புத்தல - படல்கும்புரை வீதி, வெஹெர கொட போகஹஎல்ல பகுதியைச் சேர்ந்த, புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்வி பயிலும் டி.எம். மலீஷ சந்தகெலும் (15 வயது) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் ஏனைய மாணவர்களுடன் புத்தல - படல்கும்புரை வீதியில் கடுகஹகொலனிய குளம் அருகே ஓடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
March 11, 2026
Rating:


No comments:
Post a Comment