மன்னாரில் பட்டப்பகலில் அரச ஊழியரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி அபகரிப்பு
பகல் உணவுக்காக தனது அலுவலகத்திலிருந்து மோட்டர் பைக்கிலில் தனது வீட்டுக்குச் சென்ற ஒரு பெண் அரச ஊழியரின் கழுத்தில் கத்தியை வைத்து தங்கச் சங்கிலி அபகரித்துச் சென்ற சமபவம் ஒன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் திங்கள் கிழமை (16.02) நண்பகல் 12.15 மணியளவில் உயிலங்குளம் பொவிஸ் நிலையப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது
சம்பவம் அன்று (16.02) உப தபால் அதிபரான ஒரு யுவதியான அரச ஊழியர் தனது அலுவலகத்திலிருந்து பகல் உணவுக்காக மன்னார் உயிலங்குளம் பிரதான பகுதியில் இயங்கும் தனது அலுவலகத்திலிருந்து பகல் உணவுக்காக உயிலங்குளத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திலுள்ள முதவைக்குத்தியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டர் பைசிக்கலில் சென்று கொண்டிருந்த பொழுது இவரின் கழுத்தில் கத்தியை வைத்து இவரின் கழுத்திலிருந்த ஒன்றரைப் பவுன் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளதாகவும்
தனது அலுவலகப் பகுதியிலிருந்து ஒரு மோட்டர் பைசிக்கலில் தங்கள் முகங்களை மறைத்துக் கொண்டு ஹெல்மட் அணிந்து வந்த இருவர் தன்னை பின்தொடர்ந்து வந்தவர்களே உயிலங்குளம் முதலைக்குத்தி பிரதான பாதையில் சன நடமாட்டம் அற்ற நேரத்தில் வயல்வெளி பகுதியில் வைத்தே இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும்.
துனக்கு அருகாமையில் வந்து தனது பைக்கை நிறுத்தும்படி கட்டளையிட்டதுடன் தனது கழுத்தில் கூரான கத்தியை வைத்துக் கொண்டு கழுத்திலிருந்த சங்கிலியை பிடுங்கியதுடன் மீண்டும் வந்த வழியாலேயே திரும்பிச் சென்றனர்.
இவர்கள் தனக்கு புதியவர்களாகவே காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள இவர் இது தொடர்பாக உயிலங்குளம் பொலிஸில் முறையீடும் செய்துள்ளார். இது தொடர்பாக தற்பொழுது புலன் விசாரனையில் உயிலங்குளம் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
Reviewed by Vijithan
on
February 17, 2026
Rating:


No comments:
Post a Comment