அண்மைய செய்திகள்

recent
-

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவத்துக்கு கிழக்கு பல்கலைகழக கலாச்சார பீட மாணவர் கண்டனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பாக குறித்த மாணவிக்கு நடந்த அநீதிக்கான உடனடித்தீர்வினை வழங்கவேண்டும். எனதெரிவித்துள்ள கிழக்கு பல்கலைகழக கலாச்சார பீட மாணவர் ஒன்றியம் அதேவேளை மாணவியிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளது. 

 கிழக்கு பல்கலைகழக கலாச்சார பீட மாணவர் ஒன்றிய தiலைவர் என்.ஜெயராஜ் செயலாளர் ஜீ.மதுஷhந்த் ஆகியோர் கையொழுத்திட்டு இன்று புதன்கிழமை (19) கண்டன ஊடக அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்மாணவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய விடய பெரிதும் பரபரப்பாக பேசப்படுகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவி தனது பல்கலைக்கழக கற்கை நெறியை இடைநிறுத்தும் நோக்கோடு பல்கலைக்கழக விடுதியில் இருந்து வெளியேறியதுடன் இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கும் அறியப்படுத்தியுள்ளார். குறித்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உறித்படுத்தும் படியாக விரிவுரையாளர் மாணவியோடு பேசிய குரல் பதிவுகள் சம்பவம் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

 இவ்வாறான பெண்களுக்கொதிரான வன்முறைகள் பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதும் அவை வெளிவருவது என்பது அரிதாகவே உள்ளது. அவ்வாறு வெளிவருகின்றபோதும் போதிய ஆதாரங்கள் இன்மையின் காரணமாக உரிய முறையில் நீதியினை பெற்றுக் கொள்ள முடிவதில்லை.. இதனால் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து தப்பித்துக் கொள்வதோடு அச்சமின்றி செயற்படுகின்றனர். இந்த நிலமை தொடர்வதினால் பெண்பிள்ளைகளை பல்கலைக்கழகம் அனுப்பும் பெற்றோர்கள் விருப்பப்படாததோடு பிள்ளைகளும் அச்சம் கொள்கின்றனர்.

 இதனால் பெண்களின் பல்கலைக்கழக கல்விக்கான பாரிய சவாலான நிலமை காணப்படுகின்றது இவ்வாறு பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் இனிவரும் காலங்களில் இவ்வாறான முறையற்ற செயற்படாத வண்ணம் இறுக்கமான வழிமுறைகள் பல்கலைகழகங்களில் பின்பற்றவும். குறித்த மாணவிக்கு நடந்த அநீதிக்கான உடனடித்தீர்வினை வழங்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம். இவ்வாறான பெண்களுக்கொதிரான வன்முறைகளை கிழக்கு பல்கலைகழக கலாச்சார பீட மாணவர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவத்துக்கு கிழக்கு பல்கலைகழக கலாச்சார பீட மாணவர் கண்டனம் Reviewed by Author on January 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.