டெல்லியின் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலி;40 பேர் படுகாயம்
உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை துணை தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்தார்.
40க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
வணிக வளாகத்தில் தீ பிடித்த நிலையில் தப்பிக்க நினைத்து பலர் மாடியில் இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது.
நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், மீட்பு பணிகளில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்தத் தீ விபத்தில் உயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். இது மிகவும் துயரமான சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார்
டெல்லியின் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலி;40 பேர் படுகாயம்
Reviewed by Author
on
May 14, 2022
Rating:
Reviewed by Author
on
May 14, 2022
Rating:


No comments:
Post a Comment