ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது ; பெரும் மோசமான செயல் அம்பலம்
இணையவழி ஊடாக மக்களை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மூவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்டு மோசடி
கைது செய்யப்பட்ட பெண்கள், தரமான தளபாடங்களை நியாயமான விலையில் விற்பனை செய்வதாகவும், அவற்றுக்கு உத்தரவாதம் வழங்குவதாகவும் இணையத்தளங்களில் விளம்பரங்களைப் பதிவிட்டுள்ளனர்.
நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை இவர்கள் திட்டமிட்டு மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது ; பெரும் மோசமான செயல் அம்பலம்
Reviewed by Vijithan
on
January 19, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 19, 2026
Rating:


No comments:
Post a Comment