அண்மைய செய்திகள்

recent
-

வயோதிப தாய் பஸ்ஸில் தொலைத்த பணத்தை மீட்டுக் கொடுத்த யாழ் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார்

யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பஸ்ஸில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர். வங்கியில் 96 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு குறித்த பஸ்ஸில் மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார். அவர் யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது பையை பார்த்த வேளை அதனுள் இருந்த பணத்தினை காணவில்லை. இதனையடுத்து வீதி கடமையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து பொலிஸாரிடம் அது தொடர்பில் முறையிட்டுள்ளார். 

 அதனை அடுத்து அந்த மூதாட்டியின் அடையா அட்டையை வாங்கிக்கொண்டு, முச்சக்கர வண்டியில் தம்மை பின் தொடருமாறு அறிவுறுத்தி விட்டு பொலிஸார் பஸ்ஸினை துரத்தி சென்று , கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகில் வழிமறித்து , மூதாட்டியின் பணம் காணாமல் போனமை தொடர்பில் தெரிவித்துள்ளனர். யாழ் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்ட பெரும் தொகை பணம்! அதன் பின்னர் பஸ் நடத்துனரின் உதவியுடன் , பஸ்ஸை சோதனையிட்டனர்.பணத்தினை காணாத நிலையில் , பயணிகளை சோதனையிட போவதாக கூறி , ஒரு சில பயணிகளை பஸ்ஸில் இருந்து இறக்கி சோதனையிட்ட போது , பஸ்ஸினுள் பணம் கிடப்பதாக பயணிகள் தெரிவித்தனர். 

 பேருந்தின் இருக்கை ஒன்றின் கீழ் இருந்து பணத்தினை பொலிஸார் மீட்டனர். அதில் 7 ஆயிரம் ரூபாய் குறைவாக 89ஆயிரம் ரூபாய் பணமே காணப்பட்டது. யாழ் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்ட பெரும் தொகை பணம்! அதேசமயம் அங்கு வந்திருந்த பணத்தினை தவறவிட்ட மூதாட்டி , இந்த பணம் கிடைத்ததே பெரிய விடயம் என கூறி பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த நிலையில் பஸ்ஸில் பயணித்த பயணிகளும் பொலிஸாருக்கு நன்றியையும் , பாராட்டையும் தெரிவித்தனர்.


வயோதிப தாய் பஸ்ஸில் தொலைத்த பணத்தை மீட்டுக் கொடுத்த யாழ் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் Reviewed by Author on June 23, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.