மன்னாரில் 'ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய' ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உட்பட மூன்று கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
மன்னார் நகர சபை,மன்னார்,நானாட்டான்,முசலி ,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி சார்பாக முசலி பிரதேச சபைக்கு இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.முஹம்மது பஸ்மி மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 'ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய' ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உட்பட மூன்று கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
Reviewed by Author
on
January 18, 2023
Rating:

No comments:
Post a Comment