அண்மைய செய்திகள்

recent
-

யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது

யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலையின் பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வாரம் 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு அவருடைய தாயார் சிறுநீரகம் தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களின் பங்கேற்போடு கடந்த 18ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தில் நான்கு மணித்தியாலங்களாக இடம்பெற்ற சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று மைல்கல்” என அவர் தெரிவித்திருந்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது Reviewed by Author on January 31, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.