கச்சதீவு திருவிழா 2023 தொடர்பான முக்கிய அறிவித்தல்
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த வேர்கோடு பங்குத் தந்தை கூறுகையில்:
இந்த ஆண்டு 60 விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் 2500 பேர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல இருக்கின்றனர். மேலும் ஒரு விசைப்படகில் 35 திருப்பயணிகள், 5 பணியாளர்கள் செல்ல அனு கோரப்பட்டுள்ளது.
கச்சத்தீவு கடற்கரையில் வெயிலில் மக்கள் வாடாமல் இருப்பதற்கு பந்தல் மற்றும் உணவுகள் இந்திய தூதரகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்திய அரசும், இலங்கை அரசும் இணைந்து எல்லா ஏற்பாடுகளும் செய்து திருப்பயணிகள் நல்ல முறையில் விழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிப்ரவரி 2ம் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும். வெளிமாவட்ட பயணிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தடையில்லா சான்று பெற்று ஆதார் கார்டுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசு அலுவலர்களும் தடையில்லா சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்
கச்சதீவு திருவிழா 2023 தொடர்பான முக்கிய அறிவித்தல்
Reviewed by Author
on
January 31, 2023
Rating:

No comments:
Post a Comment