மன்னாரில் நடந்த காசநோய் விழிப்புணர்வு நிகழ்வு

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மன்னார் நகர மண்டபத்தில், 'காசநோயைக் கட்டுப்படுத்தும் வேகத்தை புதிய அணுகு முறை மூலம் துரிதப்படுத்துவோம்' எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது.
மன்னார் சர்வோதயத்தின் அனுசரணையில், மாவட்ட காச நோய்த் தடுப்பு பிரிவு மேற்படி விழிப்புணர்வு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.றொபர்ட், பிரதி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் அரவிந்தன், மாவட்ட காச நோய்த் தடுப்புப் பிரிவு அதிகாரி டாக்டர் யூட் பச்சைக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். காசநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கலை நிகழ்வும் அங்கு இடம்பெற்றது. ___
மன்னாரில் நடந்த காசநோய் விழிப்புணர்வு நிகழ்வு
Reviewed by NEWMANNAR
on
October 18, 2009
Rating:

No comments:
Post a Comment