மன்னார் கடற்கரையோரமாக எரிந்த நிலையில் சடலம் மீட்பு
மன்னார் மூர் வீதி காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகாமையில் இன்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் எரியூட்டப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளார்.சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினை அடுத்து மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இராணுவம், பொலிஸ், கடற்படை உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.20 மணியளவில் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே. ஜீவராணி சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தி பார்வையிட்டதோடு சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். சடலம் இதுவரை யார்
என்று அடையாளம் காணப்படவில்லை. கடுமையாகத் தாக்கி கொலை செய்த பின்னே எரியூட்டப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.

மன்னார் கடற்கரையோரமாக எரிந்த நிலையில் சடலம் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
December 04, 2009
Rating:

No comments:
Post a Comment