மன்னார் முசலி மக்கள் வெளியேற முடியாத நிலையில்உள்ளனர். படங்கள் இணைப்பு
தெனபகுதியில் பெய்த கணத்த மழை காரணமாக வெள்ள நீர் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு அறுவியாற்றின் மூலம் ஊடறுத்து வந்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.மன்னார் மாவட்டத்தில் இதுவரை 4427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அரிப்பிற்குச் செல்லும் சகல பாதைகளும் வெள்ள நீரினாலும் கடல் நீரினாலும் சுற்றிவலைக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த கிராமத்தினைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,மற்றும் 4 அருட்தந்தையர்கள் உள்ளி பலர் 2 படகுகள் மூலம் நேற்று(06-02-11) மாலை 6 மணியளவில் அரிப்புக்கிராமத்தினை சென்றடைந்தனர்.
பின் அம்மக்களை அரிப்பு ஆலையத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.அம்மக்களுக்கு உணவாக ஒரு தொகை பாண்களை வழங்கிவைத்தார்.
அரிப்பு கிராமத்தில் இருந்து வேரு இடங்களுக்குச்செல்லும் சகல வீதிகளிலும் வெள்ளம் காணப்படுவதினால் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களுக்குத்தேவையான உணவு பொருட்களைப் பொற்றுக்கொள்வதில் சிரமங்களையும எதிர் கொள்வதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரிப்பு கிராமத்தில் மிகப் பெரிய உள்ளது. அக்குளம் உடைப்பெடுக்கும் பட்சத்தில் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என அம் மக்கள் பாராளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்தனர்.
மன்னார் முசலி மக்கள் வெளியேற முடியாத நிலையில்உள்ளனர். படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
February 08, 2011
Rating:
No comments:
Post a Comment