முகாம்களுக்குள் இருந்து கொண்டு தேர்தல்களை சந்திக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
முகாம்களுக்குள் இருந்து கொண்டு தேர்தல்களை சந்திக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தேர்தலை நடாத்தி முடிப்பதில் அரசு காட்டும் அக்கறை மக்களை மீள் குடியேற்றுவதில் இல்லை! புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபைகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்கு முன் அப்பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்
என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி இடம்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலைப்பாடு தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கும் தாம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களுக்குள்ளும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ள மக்கள் மீளக் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லைத்தீவு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரம் பெற்ற தேர்தல் முகவருமான வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்திருப்பதாவது:
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு முன்பாக அனைத்து மக்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அல்லது இடம்பெயர்ந்த நிலையில் உள்ள மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறிய பின்னர் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்.
முகாம்களுக்குள் இருந்து கொண்டே ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்கின்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனும் கருத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஆணித்தரமாக முன்வைக்கின்றார்.
2009இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், 2010இல் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாக்களிக்கும் சுதந்திரம் பறிக்கப்பட்டது.
இப்போது 2011இலும் இதே நிலமை தொடர்ந்தால் 2016ஆம் ஆண்டில் இடம்பெற இருக்கும் அடுத்த பாராளுமன்ற பொதுத்தேர்தலையும் மக்கள் முகாம்களில் இருந்தவாறே சந்திக்க நேரிடுமோ எனும் சந்தேகம் உருவாகின்றது என தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் குறைந்த அளவிலான வேட்பாளர்கள் போட்டியிட்டிருக்கின்றபோதும் முகாம்களில் உள்ள மக்களைச் சந்திப்பதில் அதிக நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கவில்லை.
இந்நிலையில் தற்போது உள்ளுராட்சித் தேர்தல்களில் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்புப் பிரதேசசபைகளில் போட்டியிடும் சுமார் 162 வேட்பாளர்களும் முகாம்களுக்குச் சென்று தமக்கான ஆதரவைத்திரட்டுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிடலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எதிர்வு கூறுகின்றார்.
கரைதுறைப்பற்று பிரதேசசபை பிரிவிற்குட்பட்ட 46 கிராம அலுவலகர் பிரிவுகளில் 13 பிரிவுகளில் இன்னமும் மீள் குடியேற்றம் நடைபெறவில்லை. இந்நிலையில் மேற்படி பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 4000 குடும்பங்கள் இன்னமும் முகாம்களிலும் வெளியிலுமாகவே வசித்து வருகின்றார்கள்.
அதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 14 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள் குடீயேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
ஏறத்தாழ 10,900 குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் முகாம்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலுமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் சுதந்திரமான வாக்களிக்கும் உரிமை தொடர்ந்தும் பறிக்கப்பட்டே வருகின்றது.
எனவே தேர்தலுக்கு முன் இம்மக்களை அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள் குடியேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும். அல்லது போனால் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் தேர்தலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும்.
தேர்தலை நடாத்தி முடிப்பதில் அரசு காட்டிவரும் அக்கறையும், கரிசனையும் சொந்த இடங்களில் மக்களை மீள் குடியேற்றுவதில் இல்லாதிருப்பது வலுவான சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றது.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பில் தமது கருத்தை தெரிவித்திருக்கின்றார்.
(மன்னார் நிருபர் லெம்பேட்)

Reviewed by NEWMANNAR
on
February 13, 2011
Rating:
No comments:
Post a Comment