சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பாத யாத்திரை
மன்னார் வேர்ல்ட் விசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் மன்னார்பிரதேச செயலகமும்,மன்னார்மாவட்டசிருவர் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தினநிகழ்வு இன்று காலை பிரதேசசெயலகத்திற்கு முன்பாக சமாதானபாத யாத்திரையுடன் ஆரம்பமானது.
சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறுகின்ற துஷ்பிரயோகங்களை,தொல்லை கொடுத்தல்களை தடுப்பதற்காக குறித்த பாதயாத்திரை இடம் பெற்றது
குறித்த சிருவர்தின பாத யாத்திரை நிகழ்வானது 'சிறுவருலகம் ஒளி பெற அனைத்து கரங்களையும் வலுவூட்டுவோம்' எனும் தொனிப் பொருளில் இடம் பெற்றது.
இதன்போது மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமான குறித்த பாதயாத்திரை மன்னார்பசார்வீதி ஊடாக சென்று மீண்டும் அரச செயலக வீதியை வந்தடைந்து மன்னார்போது நூலகத்திற்கு முன்னாள் ஒன்று திரண்டனர்.
பின் மன்னார் பொது நூலகத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கண்டால் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர தொலை பேசி இலக்கங்களைக் கொண்ட பெயர்ப் பலகை வைபவ ரீதியாக திறந்து வைக்கப் பட்டது.
குறித்த பெயர்ப் பலகை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்,மன்னார் நகர பிதா எஸ்.ஞானபிரகாசம்,மன்னார் பிரதேச செயலாளர் திருமதி.ஸ்டான்ட்லி டிமேல் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
குறித்த யாத்திரையில் பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பாத யாத்திரை
Reviewed by Admin
on
November 10, 2011
Rating:

No comments:
Post a Comment