அண்மைய செய்திகள்

recent
-

மரிச்சுக்கட்டு காட்டில் குடியேறியுள்ள முள்ளிகுளம் மக்களுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

மன்னார், மரிச்சிக்கட்டு காட்டுப் பகுதியில் குடியேறியிருக்கும் 213 குடும்பங்களைச் சேர்ந்த முள்ளிக்குளம் மக்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன், நேரில் சென்று பார்வையிட்டதுடன், அம்மக்களின் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.


2007ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக முள்ளிக்குளம் பகுதியில் இருந்து வெளியேறிய மக்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்தனர்.

வன்னியில் முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கையினைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிவடைந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து மீள்குடியேற்ற நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

ஆயினும் முள்ளிக்குளம் கிராமத்தை தவிர்ந்த ஏனைய கிராமங்களில் தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியிருக்கின்றன. இந்த நிலையில் நீண்ட பல காலங்களுக்குப் பின் முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக கிராமமான முள்ளிக்குளத்திற்கு சுமார் ஒன்றரை கிலோமீற்றருக்கு அருகாமையில் உள்ள மரிச்சிக்கட்டு காட்டுப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.




இம்மக்கள் அவர்களது பூர்வீக கிராமமாக முள்ளிகுளத்தில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு மாற்றிடமாக மளங்காடு பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுவரையில் மரிச்சிக்கட்டு பகுதியில் குடியேறுமாறும் கூறியே இந்த காட்டுப்பகுதியில் அரசாங்கத்தால் குடியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அவர்களது அன்றாட வாழ்வியல் காடுகளுக்குள்ளேயே இடம்பெற்று வருகின்றது. அரசாங்க தரப்பால் இப்போதுதான் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரிச்சுக்கட்டு காட்டில் குடியேறியுள்ள முள்ளிகுளம் மக்களுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு Reviewed by NEWMANNAR on July 21, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.