மன்னாரில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு சம்பவம்,-பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்.
மன்னார் அரச பேரூந்து வளாகத்தில் அமைந்திருக்கும் தனியாருக்கு சொந்தமான கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை திருட்டுச்சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளதாக அதன் உரிமையாளர் நேற்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நகரின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் அரச பேரூந்து நிலைய வளாகத்தினுள் தனியாருக்குச் சொந்தமான கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் இடம்பெற்றிருக்கும் கொள்ளைச்சம்பவத்தின் சூத்திரதாரிகள் யார் என்பது இதுவரையில் தெரியவில்லை.
மன்னார் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது இடம்பெற்று வரும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற போதும் குறித்த சம்பவங்களில் தொடர்படையவர்களது செயற்பாடுகள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் அரச பேரூந்து வளாகத்தில் தற்போது இடம்பெற்றிருக்கம் மேற்படி கொள்ளைச்சம்பவத்தினால் மன்னார் நகர வர்த்தகர்கள் பெரிதும் அச்சமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக தெரிகின்றது.
உரிமையாளரினால் மன்னார் பொலிஸில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முறைப்பாட்டினை அடுத்து குறித்த விற்பனை நிலையத்தில் பொலிஸார் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
மன்னார் பொலிஸாரின் விசாரணைகளுக்கு உதவியாக பொலிஸ் தடயவியல் பிரிவு மற்றும் மோப்ப நாய் பொலிஸ் பிரிவினர் வரவழைக்கப்பட்டு துரித விசாரணைகளும்,தேடுதல் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது.

Reviewed by NEWMANNAR
on
September 18, 2012
Rating:

No comments:
Post a Comment