மாற்றுத்திறனாளிகள் மட்டிலான கவனத்தை ஈர்த்த சிறுகதை நூல் வெளியீட்டு விழா
மாற்றுத்திறனாளிகள் மட்டிலான கவனத்தை ஈர்த்த
சிறுகதை நூல் வெளியீட்டு விழா
மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி வே. சந்திரகலா (வெற்றிச் செல்வி) அவர்களின் 'முடியாத ஏக்கங்கள்' என்ற சிறுகதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 1ஆம் திகதி பகல் 2.00 மணிக்கு அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளியான செல்வி சந்திரகலாவின் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வின் சிறப்பு அம்சம் என்னவெனில் அவர் மாற்றுத்திறனாளிகள் மட்டிலான கவனத்தை ஈர்க்கும்வகையில் இந்நூல் வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கு செய்தமையாகும்.
போரில் ஒரு கண்ணும் கையும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் செல்வி சந்திரகலா தனது சிறுகதைகளிலும் மாற்றுத்திறனாளிகள் மட்டிலான சமூகத்தின் பார்வை மாறவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு மன்னாhர் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த பல மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் ஒரு கையை இழந்த சிறுமி அன்பரசியின் நடன நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நூலுக்கான மதிப்பீட்டுரையை வழங்கிய இ. ஆம்பிகைபாலன் அவர்களும் இரண்டு கால்களும் வழங்காத ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.
இந்நிகழ்வில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், கலையருவி நிறுவனத்தின் இயக்குனருமாகிய அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு சமூகசேவை உத்தியோகத்தர் திரு. த. தனசீலன் அவர்கள் நிகழ்விற்கு தலைமை வகித்தார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் திரு. மா. சிறிஸ் கந்தகுமார், ஊடகவியலாளர் திரு. பொ. மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்துகொண்டனர். அடம்பன் பங்குத்தந்தை அருட்திரு. லக்கோன்ஸ் பிகிராடோ, மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்திரு. இ. செபமாலை, அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் திரு. ம. கிறிஸ்ரியான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நூல் நயம்புரையை மன்னார் வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலை தமிழ் ஆசிரியை திருமதி பரமேஸ்வரி சிலுவேஸ்திரன் வழங்கினார். ஏற்புரையாற்றிய சந்திரகலா அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு வாழவேண்டும் எனவும், இவர்கள் மட்டில் சமூகம் அக்கறையும், கரிசனையும்கொள்ள வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். மன்னார் மாற்றுத் திறனாளிகள் அமைப்பான தேனீ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
படங்களுக்கான விளக்கம்
அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் மங்கள விளக்கேற்றுகின்றார்.
ஊடகவியலாளர் திரு. பொ. மாணிக்கவசகம் மங்கள விளக்கேற்றுகின்றார்
அடம்பன் ம. ம. வித்தியாலய அதிபர் திரு. கிறிஸ்ரியான் மங்கள விளக்கேற்றுகின்றார்
அழைக்கப்பட்ட அதிதிகள் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.
மாற்றுத்திறனாளியான (ஒரு கையை இழந்த) செல்வி அன்பரசி நடனம் ஆடுகின்றார்
விழாவுக்கு வந்திருந்த சபையோர்
அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் உரையாற்றுகின்றார்.
ஊடகவியலாளர் திரு. பொ. மாணிக்கவசகம் உரையாற்றுகின்றார்
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் திரு. மா. சிறிஸ்கந்தகுமார் உரையாற்றுகிறார்
நூலாசிரியை செல்வி வே. சந்திரகலா ஏற்புரை வழங்குகிறார்.

Reviewed by NEWMANNAR
on
December 04, 2012
Rating:

No comments:
Post a Comment