மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரையில் ஆமையுடன் மூவர் கைது.நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதி
மன்னார் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17-02-2013) காலை கடல் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மூவரினால் பிடிக்கப்பட்ட பாரிய கடல் ஆமை ஒன்றுடன் குறித்த 3 மீனவர்களையும் தாழ்வுபாட்டு பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் கைது செய்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தெரிவித்தார்.
குறித்த மீனவர்களின் வலையில் சிக்சிக்கொண்ட ஆமையினை அவர்கள் கடற்கரைக்கு கொண்டு வந்த போதே விசேட அதிரடிப்படையினரால் குறித்த மீனவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதோடு குறித்த ஆமை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொலிஸ நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உயிருடன் மீட்கப்பட்ட குறித்த ஆமை 180 கிலோ கிராம் எடை கொண்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின் குறித்த மூன்று மீனவர்களும் மன்னார் நீதவான் முன்னிலையில் நேற்று மதியம் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த மீனவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு குறித்த ஆமை நீதவானின் உத்தரவிற்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்களின் வலையில் சிக்சிக்கொண்ட ஆமையினை அவர்கள் கடற்கரைக்கு கொண்டு வந்த போதே விசேட அதிரடிப்படையினரால் குறித்த மீனவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதோடு குறித்த ஆமை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொலிஸ நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உயிருடன் மீட்கப்பட்ட குறித்த ஆமை 180 கிலோ கிராம் எடை கொண்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின் குறித்த மூன்று மீனவர்களும் மன்னார் நீதவான் முன்னிலையில் நேற்று மதியம் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த மீனவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு குறித்த ஆமை நீதவானின் உத்தரவிற்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது.
மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரையில் ஆமையுடன் மூவர் கைது.நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதி
Reviewed by Admin
on
February 18, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment