வடபகுதிக்கு இரண்டு புதிய குடி நீர் திட்டம்
.jpg)
புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த இரு குடிநீர் விநி யோகத் திட்டத்தின் மூலம் 16 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 12,594 பொதுமக்கள் நன்மையடைகின்றனர்.
295 மில்லியன் செலவில் அடம்பனில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த குடிநீர் விநியோகத் திட்டத்தின் மூலம் அடம்பன், வேட்டையான் முறிப்பு, பாப்பாமோட்டை, மாளிகைத்திடல், மினுக்கன், சொர்ணபுரி, பாலைக்குழி, நெடுங்கண்டல் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு நீர் விநி யோகிக்கப்படவுள்ளதுடன், இதனூடாக 6000 க்கும் அதிகமானவர்கள் நன்மையடையவுள்ளனர்.
175 மில்லியன் செலவில் நெடுங்கேணியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் நெடுங்கேணி வடக்கு, நெடுங்கேணி தெற்கு, ஒலுமடு, மாமடு, சேனை புலவு ஆகிய கிராம சேவகர் பிரிவு களைச் சேர்ந்த 6000க்கும் அதிகமானவர்கள் நன்மையடையவுள்ளனர்.
இந்த இரு குடிநீர் விநியோகத்திட்டத்தின் மூலம் அடம்பன் மற்றும் நெடுங்கேணி பிரதேச மக்கள் இதுவரை காலம் எதிர்கொண்டு வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிர தேசங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கின் துரித மீட்சித் திட்டத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன, கைத்தொழில் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மேற்படி குடிநீர் திட்டத்தை
வடபகுதிக்கு இரண்டு புதிய குடி நீர் திட்டம்
Reviewed by NEWMANNAR
on
March 07, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment