11 பவுண் பெறுமதியான தங்க ஆபரணங்கள் அபேஷ்.

சம்பவம் நடைபெற்ற தினத்தன்று இல்லத் தலைவி பிள்ளையை தனது கணவனிடம் ஒப்படைத்து விட்டு அருகிலுள்ள பாடசாலைக்கு தனிப்பட்ட வேலையின் நிமித்தம் சென்றுள்ளார். வீட்டில் இருந்த கணவரும் குழந்தை அருகிலிருக்கும் உறவினரின் வீட்டிற்கு ஓடி விடவே தந்தையாரும் குழந்தைக்குப் பி்ன்னால் சென்று உறவினரின் வீட்டிலேயே நின்றுள்ளார்.
இதனை அவதானித்துக் கொண்டிருந்த திருடன் வீட்டின் புகைக்கூட்டின் மீதேறி அருகே இருந்த ஓட்டைப் பிரித்து உள்ளிறங்கி ஓா் அறையிலிருந்த அலுமாரி மீது மிக லாவகமாக இறங்கியுள்ளான். இறங்கிய திருடன் தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த அலுமாரியைய திறந்து தாலிக்கொடி உட்பட சில தங்க ஆபரணங்களையும் திருடிக்கொண்டு தலைமறைவாகியுள்ளான். இது தொடா்பில் முருங்கன் பொலிஸில் முறையிட்டதைத் தொடா்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
11 பவுண் பெறுமதியான தங்க ஆபரணங்கள் அபேஷ்.
Reviewed by மன்னார் மன்னன்
on
March 14, 2013
Rating:

No comments:
Post a Comment