வடமாகாணத் தேர்தல் அறிவிப்பு திங்களன்று
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை விடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
வடக்கு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்துக்குத் தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. எந்தவொரு மாகாணசபைக்கும் புதிதாகத் தேர்தல் நடத்தப்படுவதானால் ஜனாதிபதியினால் அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரே அதனை நடத்த முடியும்.

அந்த வகையில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி வெளியிடப்படும் என்றும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அன்றைய தினமே மத்திய, வடமேல் மாகாண சபைகளையும் கலைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செப்ரெம்பர“ 7 ஆம் திகதி அல்லது 14 ஆம் திகதி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படும் என்றும் இதற்குரிய வேட்புமனு விண்ணப்பங்களை அரச அச்சகத்தில் அச்சிடுவதற்கு தேர்தல்கள் ஆணையாளரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Reviewed by NEWMANNAR
on
June 19, 2013
Rating:

No comments:
Post a Comment