அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் மதச் சச்சரவு போதகர் உட்பட 12 பேர் காயம்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பிரதேசம் சுக்கான்கேணியில் நேற்றுக்காலை இந்து ஆலய நிர்வாகிகளுக்கும் மெதடிஸ்த மிஷன் திருச்சபையினருக்கும் இடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதில் மதபோதகர் ஒருவர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.


அந்தப் பகுதியிலுள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.  அதே சமயத்தில் அருகில் உள்ள மெதடிஸ்த திருச்சபை தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அப்போது திருச்சபையின் வழிபாடுகள் ஒலிபெருக்கி மூலம் நடைபெறுவதால் தமது பூசைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக  பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதை அடுத்து வாய்தகராறு முற்றி மோதலாக வெடித்தது.

இதையடுத்து அந்தத் திருச்சபை தேவாலயமும் அதன் அருகில் இருந்த வீடொன்றும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பலரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
மட்டக்களப்பில் மதச் சச்சரவு போதகர் உட்பட 12 பேர் காயம் Reviewed by NEWMANNAR on June 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.