ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தை கூட்டமைப்பு ஏற்பது படுபாதகம்; ஆனந்தசங்கரி
சமஷ்டியைக் கைவிட்டு ஒற்றை ஆட்சி அடிப்படையில் ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வது என்பது படுபாதகச் செயலாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக் கப்பட்டிருப்பதாவது, ஐக்கிய தேசியக் கட்சி 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமஷ் டிக் கொள்கையை முன் வைத்தே போட்டியிட்டது. 49 சதவீத மக்களின் ஆதரவு கிடைத்தது.
தந்தை செல்வாவும் இனப்பிரச் சினைக்குத் தீர்வாகச் சமஷ்டியையே முன் வைத்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் ஐ.தே.க சமஷ்டிக் கொள்கையைக் கைவிட்டு ஒற்றை ஆட்சி அடிப்படையில் அரசியல் சாசனத்தை உருவாக்குவதாக கூறியுள்ளது.
இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாராட்டியிருப்பது பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கோடி பெறுமதியான சொத்துக்களையும் இழந்த தமிழ் மக்களுக்குச் செய்யும் படுபாதகச் செயலாகும்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத அறிக்கைகளை விடும் சுமந்திரன் பதவி விலக வேண்டும். அல்லது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அவரைப் பதவி விலக்க வேண்டும் என்றுள்ளது.
ஒற்றையாட்சி அரசியல் சாசனத்தை கூட்டமைப்பு ஏற்பது படுபாதகம்; ஆனந்தசங்கரி
Reviewed by NEWMANNAR
on
June 02, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 02, 2013
Rating:

No comments:
Post a Comment