மன்னார் மாவட்ட மாதர்சங்க விளையாட்டுக் கழக பிரதிநிதிகள் மற்றும் வாழ்வின் எழுச்சி தேசிய வேலைத்திட்டத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய டக்லஸ் (படங்கள்)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வின் எழுச்சி தேசிய வேலைத்திட்டத்தின் மன்னார் மாவட்டத்திற்கான மீளாய்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இம் மீளாய்வுக் கலந்துரையாடல் இன்றைய தினம் (18) இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்பு நிலையம், கைத்தொழில் அபிவிருத்தி சபை உள்ளடங்கலான நிறுவனங்களது செயற்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார்ந்தோரிடம் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.
வாழ்வின் எழுச்சி திட்டத்தின் ஊடாக மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் அபிவிருத்தி செய்வதுமே தமது நோக்கமெனவும் சரியான தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கான கடனுதவிகளை மேலும் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.
இவ்வேலைத்திட்டங்கள் அர்த்தபூர்வமுள்ளதாக அமையும் வகையில் வேகப்படுத்தி முன்னேற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நிமெல்டா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட உதவி அமைப்பாளர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.
மன்னார் மாவட்ட மாதர்சங்க விளையாட்டுக் கழக பிரதிநிதிகள் சந்திப்பு
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மன்னார் மாவட்ட மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். மேற்படி சந்திப்பு இன்றைய தினம் (18) இடம்பெற்றுள்ளது. இதில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், மாதர் சங்கங்களினதும், விளையாட்டுக் கழகங்களினதும் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தாம் ஆராய்ந்து துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட உதவி அமைப்பாளர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.
மன்னார் மாவட்ட மாதர்சங்க விளையாட்டுக் கழக பிரதிநிதிகள் மற்றும் வாழ்வின் எழுச்சி தேசிய வேலைத்திட்டத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய டக்லஸ் (படங்கள்)
Reviewed by Admin
on
July 19, 2013
Rating:
No comments:
Post a Comment