வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவும்: கூட்டமைப்பு மேனனிடம் வலியுறுத்து
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேன னுக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டப்பு பிரதிநிதிகள் மேனனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வட மாகாண சபைத்தேர்தலில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலொன்றை எதிர்ப்பார்க்கவேண்டுமாயின் சார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச்சேர்ந்த சர்வதேச கண்காணிப்பாளர்களை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று நடைபெறுகின்ற பேச்சுவார்த்தையின் போது எடுத்துரைப்பதாக மேனன் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவும்: கூட்டமைப்பு மேனனிடம் வலியுறுத்து
 Reviewed by Admin
        on 
        
July 09, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 09, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
July 09, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
July 09, 2013
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment