வெலிவேரியவில் உயிரிழந்தோர் மூன்றாக அதிகரிப்பு
சுத்தமான தண்ணீர் வழங்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது காயமடைந்த 19 மற்றும் 17 வயதான இருவர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெலிவேரியவில் உயிரிழந்தோர் மூன்றாக அதிகரிப்பு
 
        Reviewed by Admin
        on 
        
August 04, 2013
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
August 04, 2013
 
        Rating: 


No comments:
Post a Comment