பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சூரியன் வடக்கு நோக்கி நகரும் போது, இன்று வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சியில் நிலவுகிறது.
அதற்கமைய இன்றைய தினம் நண்பகல் 12:10 மணியளவில் பண்டத்தரிப்பு, தெல்லிப்பழை, வருத்தலைவிளான், வசவிளான் மற்றும் மணற்காடு ஆகிய பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
April 15, 2026
Rating:


No comments:
Post a Comment