மன்னார் பேசாலை பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்
மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இடை மறித்து அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு வீதி போக்குவரத்து பிரிவு போலீசார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பேசாலை பொலிஸ் நிலைய பிரதான வீதியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது மோட்டார் சைக்கிலில் வந்த ஒருவரை இடைமறித்து மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றை கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் அனைத்து ஆவணங்களையும் கொடுத்த போதும், குறித்த கடமையில் ஈடு பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆவணங்களை பரிசீலித்த பின்னர் அவற்றை மீண்டும் வழங்காது தனது புத்தகத்தில் எழுத முயன்ற போது குறித்த நபர் தனது சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த வீதி போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.
இதன் போது குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த நபரை தாக்க முயற்சி செய்ததோடு,தகாத நடவடிக்கையில் குறித்த வீதி போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டதாக குறித்த நபர் குற்றம் சுமத்தியதோடு,குறித்த இரு பொலஸாரின் நடவடிக்கைகளையும் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர்.ஆவணங்களை பரிசோதித்த பின்னர் பதிவு செய்து மீண்டும் வழங்கிய நிலையில் குறித்த நபர் அங்கிருந்து சென்றார்.
இதேவேளை பேசாலை பொலிஸ் நிலைய வீதியில் இரவு நேரங்களில் கடமையில் ஈடுபடுகின்ற வீதி போக்குவரத்து பொலிஸார் அவ்வீதியால் செல்பவர்களை மறித்து பணம் அல்லது மதுபான போத்தல் கேட்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸாரின் நடவடிக்கை குறித்து வன்னி பொலிஸ்மா அதிபர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
April 25, 2026
Rating:


.jpeg)

No comments:
Post a Comment