இலங்கையில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
போலி மருத்துவர்களால் நோய்களுக்கு உள்ளாகும் நாட்டு மக்களின் உயிருக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை கவனத்தில் கொண்டு இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதுடன் 5 மாகாணங்களில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் மேல் மாகாணத்தில் உள்ள போலி மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் மேல் மாகாணத்தில் தனியார் மருத்துவச் சேவைகளை நடத்தி வரும் ஆயிரத்து 600 மருத்துவர்களில் 43 பேர் போலி மருத்துவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேபோல் தென்மாகாணத்தில் தனியார் மருத்துவச் சேவைகளை நடத்திய வரும் ஆயிரத்து 100 மருத்துவர்களில் 224 பேர் போலி மருத்துவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டுள்ள போலி மருத்துவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் 32 பேருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
போலி மருத்துவர்கள் என அடையாளம் காணப்படும் நபர்களுக்கு நாட்டில் உள்ள சட்டத்தின்படி 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான அபராதம் மாத்திரமே விதிக்கப்படுகிறது. இதனால் சட்டத்தினால் தண்டனை பெற்றவர்கள் மீண்டும் அதே தொழிலில் ஈடுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவருகிறது.
இலங்கையில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Admin
on
August 26, 2013
Rating:

No comments:
Post a Comment