அண்மைய செய்திகள்

recent
-

நூற்றிற்கு மேற்பட்ட இந்திய மீனவர் இலங்கை சிறைகளில் தடுத்து வைப்பு

இலங்கையில் நூற்றுக்கு மேற்பட்ட இந்திய மீனவர் சிறைவாசம் அனுபவித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவிக்கையில், கடந்த மாதம் 30ஆம் திகதியன்றுள்ளவாறு கிடைக்கப் பெற்றுள்ள தகவலின்படி இலங்கையில் 114 இந்திய மீனவர்கள் 21 இந்திய மீன்பிடிப் படகுகள் சகிதம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேலாக போதை பொருள் மற்றும் சட்ட விரோத பொருட்களை கடத்திய குற்றச்சாட்டுக்களின் பேரில் இலங்கையில் 14 இந்திய மீனவர்கள் நான்கு படகுகள் சகிதம் சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 அமைச்சர் குர்ஷித் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, எமது மீனவர்களின் சேமநலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அரசாங்கம் அதி முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. இந்திய மீனவர்களின் கைது பற்றிய செய்திகள் கிடைக்கப் பெற்றதும் அரசாங்கம் இராஜதந்திர நகர்வுகள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு அவர்களைத் துரிதகதியில் விடுதலை செய்து தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பல்வேறு மட்டங்களில் நடத்தப்பட்ட இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போதும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

 கொழும்பில் கடந்த வருடம் ஜனவரியில் நடைபெற்ற கடற்றொழில் குறித்த இந்திய - இலங்கை கூட்டுச் செயலணியின் நான்காவது கூட்டத்தில் இரு நாடுகளையும் சேர்ந்த மீனவர்களின் சேமநலன் மற்றும் பாதுகாப்பு குறித்து இரு நாட்டு அரசாங்கங்களும் செய்து கொள்ளப்பட்ட பரஸ்பர ஒப்புதலுக்கு ஆகக்கூடியளவிலான முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் மேலும் பிரஸ்தாபித்தார்.


நூற்றிற்கு மேற்பட்ட இந்திய மீனவர் இலங்கை சிறைகளில் தடுத்து வைப்பு Reviewed by Admin on August 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.