அண்மைய செய்திகள்

recent
-

நவிபிள்ளையின் விஜயத்தின் பின் த.தே கூட்டமைப்பின் பிரிவினைவாத கருத்துக்கள் அதிகரித்துள்ளன: மொஹமட் முஸாமில்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீதம் பிள்ளையின் விஜயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அதிளவான பிரிவினைவாத கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என என தேசிய சுதந்திர முன்ணனியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மொஹமட் முஸாமில் இதனைத் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பயங்கரவாத அமைப்பு அல்ல. இதேபோன்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பயங்கரவாதியல்ல. அவர் தமிழ் மக்களின் வீரன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சட்ட அதிகாரத்தை நிலைநிறுத்த செயற்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் எவ்வாறு இப்படியான கருத்துக்களை முன்வைக்க முடியும். விடுதலைப் புலிகள் அன்று ஆயுதம் மற்றும் சர்வதேச பலத்தை கொண்டு செயற்பட்டனர். இதேபோன்று தற்போது அரசியல் மற்றும் சர்வதேச பலத்தை கொண்டு இயக்கப்படுகின்றது என்றார்.

நவிபிள்ளையின் விஜயத்தின் பின் த.தே கூட்டமைப்பின் பிரிவினைவாத கருத்துக்கள் அதிகரித்துள்ளன: மொஹமட் முஸாமில் Reviewed by NEWMANNAR on September 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.