வடமாகாண சபை அமைச்சர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வில் 9 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை
வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் வடமாகாண சபைத்தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
முதலாவது வடமாகாண சபை அமைச்சர்களுக்கான பதியேற்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (11) காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைத் தவிர்ந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இருப்பினும், டெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்மற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.எல்.ஆர்.எப்.பில் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டில் அங்கம் வகிக்கும் 2 உறுப்பினர்களும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோவில் அங்கம் வகிக்கும் இருவரும் இப்பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
வடமாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன், சிவப்பிரகாசம் சிவமோகன், எம்.தியாகராஜா, மயில்வாகனம் இந்திரராஜா, ஆறுமுகம் சின்னத்துரை துரைராஜா ரவிகரன், புளொட் அமைப்பின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தர் தமோதரம்பிள்ளை லிங்கநாதன், ரொலோ அமைப்பின் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், மன்னார் உறுப்பினரான குணசீலன் ஆகியோரே இந்த பதவியேற்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடமாகாண சபை அமைச்சர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வில் 9 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை
Reviewed by Admin
on
October 11, 2013
Rating:

No comments:
Post a Comment