அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ளூராட்சி வார மர நடுகை நிகழ்வு.- படங்கள்

தேசிய ரீதியில் செயற்படுத்தப்படும் இவ்வருடத்திற்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் அடிப்படையில் உள்ளூராட்சி வாரத்தின் 05ம் நாளாகிய நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2013) மர நடுகை தினமாகும். 

 இதற்கமைய மன்னார் நகரசபை இந்நிகழ்வினை வெகு விமர்சையாகவும் சிறப்பாகவும் ஒழுங்கு படுத்தியிருந்தமை அவதனிக்கக் கூடியதாயிருந்தது. மன்னார் பொது நூலகத்தில் நடை பெற்ற மர நடுகை பற்றிய சிறப்பு நிகழ்வுகளைத் தொடர்ந்து மன்னார் பொது நூலக வளாகம் மற்றும் அதனை அண்மித்த எஸ்பிளெனட் வீதி ஆகிய இடங்களில் பயன் தரும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. 

 மன்னார் நகரசபையின் கௌரவ தலைவர் திரு.எஸ்.ஞானபிரகாசம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு நகரசபை உப- தலைவர், உறுப்பினர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் நகரசபை செயலாளர் ஆகியோருடன் நகரசபை உத்தியோகத்தர்களும் சூழல் சுற்றாடல் உத்தியோகத்தர், நூலக ஆலோசகர். 

டாக்டர்.எஸ்.லோகநாதனும் கலந்து கொண்டனர். இந் நிகழ்விற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் பொறியியல் பிரிவு பணிப்பாளர் எந்திரி. ஜனாப். என்.ரி.எம். சிராஜீதீன் அவர்கள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.













மன்னாரில் உள்ளூராட்சி வார மர நடுகை நிகழ்வு.- படங்கள் Reviewed by Admin on October 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.