மன்னார் சிலாபத்துறை கடற்பரப்பில் காணாமல் போன இரு மீனவர்களும் சடலமாக மீட்பு..(படங்கள்)
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை கடற்கரையில்; இருந்து மன்னார் தென்கடல் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை கணவாய் பிடிப்பதற்காக படகு ஒன்றில் சென்று காணாமல் போன இரு மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் போசாலை நடுக்குடா கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
-கடந்த வெள்ளிக்கிழமை கண்ணாடியிழைப்படகு ஒன்றில் சவேரியார் புரம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களான முத்தாண்டி லோரன்ஸ்(வயது-40) அவரின் மகன் லோரன்ஸ் லடிஸ்(வயது-22), மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த லிங்கத்துறை சுரேஸ் (வயது-20) ஆகியோர் சென்றிருந்தனர்.
-இவர்கள் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மறு நாள் சனிக்கிழமை காலை மன்னார் பணங்கட்டுக்கொட்டு பகுதியில் இருந்து தொழிலுக்கு மீனவர்கள் சென்ற போது மன்னார் கடல் சல்லிப்பகுயில் முத்தாண்டி லோரன்ஸ்(வயது-40) என்ற மீனவர் கடலில் தத்தளித்துக்கெண்டு இருப்பதைக் கண்டு அம்மீனவரை குற்றுயிரான நிலையில் காப்பாற்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனாலும் ஏனைய இளைஞர்களன இரு மீனவர்களையும் தேடும் முகமாக சிலாவத்துறை அரிப்பு பாகுதியில் இருந்து சுமார் 50 படகுகளில் கடந்த 3 தினங்களாக அப்பகுதி மீனவர்கள் கடலில் தேடுதலில் ஈடுபட்டனர்.
இத்தேடுதலின் போது நேற்று திங்கட்கிழமை மாலை பேசாலை நடுக்குடா கடற்கரையில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள கடற்பரப்பில் இருந்து இவ் இரு மீனவர்களின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டு கரைசேர்க்கப்பட்டன.
இவ் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன் சிலாவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
(மன்னார் நிருபர்)
(8-10-2013

Reviewed by NEWMANNAR
on
October 08, 2013
Rating:
No comments:
Post a Comment