இசைப்பிரியா விடயத்தில் பெண்கள் அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன்?- அரியநேத்திரன் எம்.பி கேள்வி
இசைப்பிரியா காணொளி விவகாரம் உலகமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் பெண்ணொருவருக்கு இழைக்கப்பட்ட உயர்ந்த கொடூரத்தை பார்த்திருந்தும் இலங்கையிலுள்ள எந்தவொரு மாதர் அமைப்பும், பெண்ணுரிமை சங்கங்களும் தமது கண்டனத்தை தெரிவிக்காமை கவலையளிப்பதாக பா. உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை சாதாரண ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையாகப் பார்க்கப்பட வேண்டும். இலங்கையில் எத்தனையோ மாதர் அமைப்புக்கள், பெண்ணுரிமை சங்கங்கள் இயங்கி வருகின்றன.
பல்வேறு காரணங்களுக்கு குரல் கொடுக்கும் இந்த பெண்கள் அமைப்புக்கள், இசைப்பிரியாவுக்கு இழைத்த இந்தக் கொடுமையை பார்த்தும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணுரிமை மாதர் உரிமை அரசியல் உரிமை ஆண்களுக்கு நிகரான சமத்துவ உரிமைக்காக போராடி வருகின்றோமென்று கூறிக்கொள்ளும் இந்த பெண்கள் அமைப்புக்கள் இத்தகைய கொடூரத்தை கண்டும் கூட ஜனநாயக ரீதியான தமது கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை. இசைப்பிரியா ஒரு போராளி என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு அவரை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கி அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
நாகரீகத்தன்மையுள்ள எந்த மனிதனும் செய்யத்தகாத செயலை இந்த காட்சி மூலம் காணமுடிகிறது. இது மனித குல நாகரீகத்துக்கே இழுக்குத்தரும் செயல் என்பதை இலங்கையிலுள்ள பெண்ணுரிமை அமைப்புக்களும் உலகநாடுகளின் அமைப்புக்களும் ஜனநாயக வழியிலாவது இதைக்கண்டிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இசைப்பிரியா விடயத்தில் பெண்கள் அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன்?- அரியநேத்திரன் எம்.பி கேள்வி
Reviewed by NEWMANNAR
on
November 04, 2013
Rating:

No comments:
Post a Comment