இடி மின்னல் தாக்குதலில் நாட்டில் 18 பேர் பலி
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று 2 பேர் இடிமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர். காலி பத்தேகம பிரதேசத்தில் நேற்றைய தினம் இடிமின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதன்படி கடந்த 11 மாதங்களில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இடி மின்னல் தாக்குதல்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது என்றும் நாட்டில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நீடிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடி, மின்னலுடன் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
மழை வீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடி மின்னல் தாக்குதலில் நாட்டில் 18 பேர் பலி
Reviewed by NEWMANNAR
on
November 04, 2013
Rating:

No comments:
Post a Comment