வடக்கு முஸ்லிம்களுக்கு கூட்டமைப்பு ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு உதவ முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கூட்டமைப்பு வடக்கில் உள்ள முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கினால், கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவு வழங்க முடியும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து பணியாற்றலாம்
.
இரண்டு கட்சிகளும் இடையிலான ஒத்துழைப்பு உத்தியோகபூர்வமாக இன்றி ஒரு முறைசாரா அளவில் இருக்கும் என்றார்.
வடக்கு முஸ்லிம்களுக்கு கூட்டமைப்பு ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Reviewed by Admin
on
November 03, 2013
Rating:

No comments:
Post a Comment