நானாட்டான் பிரதேசத்திற்கு விஜயம் செய்த வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் "மேட்டுத் தீவு" அரச காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வு - படங்கள்
நானாட்டான், பொண்தீவுக்கண்டல் மற்றும் பூவரசங்குளம் கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட இரு கிராமங்களுக்குக்கும் மத்தியில் அமைந்திருக்கின்ற “மேட்டுத் தீவு” அரச காணி விவகாரத்தில் தற்போது இரு கிராம மக்களிடையே முறுகல் நிலைகள் தோன்றியுள்ளன.
இது குறித்து நிலைமைகளை நேரில் கண்டறிவதற்காக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சார்பிலான வடமாகாண சபை உறுப்பினர் சகோதரர் அ.அஸ்மின் கடந்த 31.10.2013 அன்று அங்கு விஜயம் செய்து பிரதேச செயலாளரினால் பகிர்ந்தளிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த காணிப் பிரதேசத்தைப பார்வையிட்டதுடன் அப்பிரதேச முஸ்லிம், தமிழ் மக்களையும் நானாட்டான் பிரதேச செயலாளரையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினார்.
மேற்படி விடயத்திற்கு இரு சமூகங்களின் நல்லிணக்கம் பாதிப்படையாத விதத்தில் உயர் மட்டங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி விரைவில் உரிய தீர்வு பெற்றுத்தருவதற்கு முயற்சி செய்வதாக அவர் மக்களிடம் தெரிவித்தார்.
இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 7ம் திகதி காலை நானாட்டான் பிரதேச செயலகத்தில் விரிவான உயர்மட்ட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் குறிப்பிட்டார்.
நானாட்டான் பிரதேசத்திற்கு விஜயம் செய்த வட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் "மேட்டுத் தீவு" அரச காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வு - படங்கள்
Reviewed by Admin
on
November 03, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment