நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவவேண்டும் ; க.வி. விக்னேஸ்வரன்
.jpg)
இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கேள்வியயழுப்பியபோது எங்களுடைய நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தப் போகின்றோமா இல்லையா என்பது தான் கேள்வி . நான் ஒன்றைச் சொல்ல அதற்கு பதில் சொல்ல நான் மீண்டும் என்று சொல்வேன் .
அவ்வாறு விவாதம் நடத்தத் தேவையில்லை . விவாதத்தில் எனக்கு நல்ல பரீச்சயமுண்டு . நாங்கள் இந்த நாட்டிலே ஒத்துழைப்பையும் ஒருமித்த தன்மையையும் கொண்டுவரப் பாடுபடுகின்றோம் .
இந்தப் போருக்குப் பின்னர் எங்கள் தமிழ் மக்கள் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் . பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் . எங்களுக்கு எங்களுடைய வாழ்கையை நடத்துவதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறுவது கடமை . அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதியின் பொறுப்பு .
ஜனாதிபதி தான் நினைத்ததே தான் சரி . நீங்கள எதைப் பற்றி யோசித்தாலும் எதைப் பற்றிச் சிந்தித்தாலும் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நான் அதற்குப் பொறுப்பல்ல .
நான் நினைத்ததையே செய்வேன் என்றால் என்பதில் சொல்ல முடியாது .
ஆனால்இ எங்களுடைய பிரச்சினைகளை எடுத்தச் சொல்லும் போது பக்கச் சார்பான பிரச்சினை என்று எடுத்துக் கொள்வது பிளையானது . இராணுவம் இருப்பதால் நாங்கள் எங்கள் நாளாந்த வேலைகளை செய்யமுடிவதில்லை . படிப்படியாகவாவது இராணுத்தை அகற்றுங்கள் என்று கேட்கின்றோம் . இராணுவத்தில் இருந்து ஆணையிடும் ஒருவரால் மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியாது . எனவே ஆளுநரை மாற்ற வேண்டும் . இதனை வேறுவிதமாக வியாக்கியானம் செய்தால் அதனால் பாதிப்படைவது நாங்களே என்றார் .
நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவவேண்டும் ; க.வி. விக்னேஸ்வரன்
Reviewed by Author
on
November 02, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment