அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஓலைத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் 510 ஏக்கர் காணி தனி நபரால் அபகரிப்பு

மன்னார் பிரதேச சபைக்குற்பட்ட பகுதியில் உள்ள மூன்று கிராமங்களை உள்ளடக்கிய 510 ஏக்கர் காணி தனி நபர் ஒருவரினால் அபகரிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குற்பட்ட ஓலைத்தொடுவாய் கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட உவரி, தாழங்காடு, கருப்பன் குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களையும் உள்ளடக்கி புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவரினால் 510 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு போலி ஆவணங்களை தயாரித்து கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த 510 ஏக்கர் காணியில் தமது காணிகளும் உள் அடங்குவதாக உரிமை கோரி சுமார் 20 இற்கும் மேற்பட்டவர்கள் மன்னார் பிரதேச சபைக்கு வந்து பிரதேச சபையின் உப தலைவராகிய என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் காணியை சட்டவிரோதமாக விற்பனை செய்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த குறித்த நபரையும்,அதனை வேண்டிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரையும் அழைத்து பேர்ச்சு வார்த்தையினை மேற்கொண்டோம். இதனைத்தொடர்ந்து கடந்த 16-12-2013 அன்று பாதீக்கப்பட்டவர்கள் மன்னார் பிரதேச சபைக்கு அழைக்கப்பட்டு சட்டத்தரணியூடாக ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.இதன் போது ஓய்வு பெற்ற வடமாகாண காணி ஆணையாளர் கே.குருநாதன் முன்னிலையில் பல விளக்கங்கள் முன்வைக்கப்பட்டது.

மன்னார் பிரதேச சபை குறித்த காணி தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.எனினும் காணிகளை பறிகொடுத்த குறித்த கிராம மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. விற்பனை செய்யப்பட்ட குறித்த 510 ஏக்கர் காணியில் குறித்த நபர் எது வித வேளைத்திட்டங்களையும் மேற்கொள்ள மன்னார் பிரதேச சபை தடை விதித்துள்ளது.என மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.
மன்னார் ஓலைத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் 510 ஏக்கர் காணி தனி நபரால் அபகரிப்பு Reviewed by Admin on December 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.