பத்திற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்பு. மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதை குழி தோண்டும் பணி தொடர்கின்றது.[படங்கள் இணைப்பு]
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் இது வரை 10 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள்
மீட்கப்பட்டுள்ளது .மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இரண்டாவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மனித புதை குழி தோண்டப்பட்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது .
மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்து குறித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மனித புதைகுழிகள் தோண்டும் ; பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தோண்டப்பட்ட போது மூன்று மனித மண்டையோடுகளும் , ஏனைய பாகங்களும் மீட்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் .
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார் .
பின் மன்னார் நீதவான் மற்றும் ; சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட புதை குழி தோண்டப்பட்டது .
இதன் போது மேலும் சிதைவடைந்த நிலையில் துண்டு துண்டுகளாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் நேற்று ; சனிக்கிழமை மாலை மேலும் இரண்டு மண்டையோடுகளும் , மனித எச்சங்களும் மீட்கப்பட்டது .
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாவது நாளகவும் மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதைகுழி தோண்டப்பட்டது .
இதன் போது மேலும் பல மண்டையோடுகளும் மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளது .
இது வரை 10 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது . மேலும் பல மனித எச்சங்கள் அப்பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது . மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகினறது .
இன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை மனித புதை குழி தோண்டப்பட்ட நிலையில் தற்போது குறித்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது .
- குறித்த மனித புதை குழி தோண்டும் பணிகள் நாளை திங்கட்கிழமை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது தற்போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் .
பத்திற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் மீட்பு. மன்னார் நீதவான் முன்னிலையில் மனித புதை குழி தோண்டும் பணி தொடர்கின்றது.[படங்கள் இணைப்பு]
Reviewed by Admin
on
December 22, 2013
Rating:

No comments:
Post a Comment