கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்த வேண்டாம் என்று பொலீஸார் கூறியது தொடர்பில் பொலீஸ் அத்தியட்சகர்களின் கவனத்திற்கு றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்த வேண்டாம் என்று பொலீஸார் கூறியது தொடர்பில் பொலீஸ் மா அதிபர் ,பிரதி பொலீஸ் மா அதிபர்,கொழும்பு பிரதேச சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா,களுபோவில தெஹிவளை மஸ்ஸிதுல் தாருல் சாபீய்,தெஹிவளை தாருல் அர்க்கம் ஆகிய பள்ளிவாசல்களுக்கு சென்ற பொலீஸார் இங்கு தொழுகை நடத்தக் கூடாது என்று பள்ளி பாரிபாலன சபையினரிடம் தெரிவித்துள்ளதையடுத்து நிர்வாகத்தினர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களிடத்தில் இது குறித்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலீஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் மதத் தளங்கள்மீது மீண்டும் ஆரம்பிக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும்,இவ்வாறான மத விடயங்கள் தொடர்பில் தலையீடு செய்வதானது சட்டத்திற்கு முரணானதொன்று என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்கள் தொடர்பில் அவற்றை நிர்வாகம் செய்வது வக்பு சபையாகும்,பாராளுன்றத்தில் நிறைவேற்றப்ட்ட சட்டங்களுக்கு அமைய இந்த வக்பு சபை ஸ்தாபிக்கப்பட்டது.இதனை மீறி பள்ளிவாசல்களை மூடுவதற்கும்,அங்கு தொழுகை நடத்துவதற்கும் தடைகளை ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கையினையெடுக்க வேண்டும் என அமைச்சர் பொலீஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெஹிவளை பிரதேசத்தில் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்,மற்றும் நிர்வாகத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில்,இந்த அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மதகுருவே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பது குறித்து பிரதேச மக்கள் கருதுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதே வேளை இன்று (2013.12.17) அதிகாலை மஸ்ஜீது தாருஸ் சாபி பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் நிலை தொடர்பில் நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்த வேண்டாம் என்று பொலீஸார் கூறியது தொடர்பில் பொலீஸ் அத்தியட்சகர்களின் கவனத்திற்கு றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.
Reviewed by Admin
on
December 17, 2013
Rating:
Reviewed by Admin
on
December 17, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment