அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் லஞ்சம் கேட்ட பொலிஸுக்கு எதிராக வீதிமறித்து போராட்டம் (photos)

பொலிஸாருக்கு லஞ்சம் தரமாட்டோம் என தெரிவித்து வவுனியா இலுப்பையடியில் நேற்று (16) இரவு 7.30 மணியளவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த தாயும் மகனும் இலுப்பையடியில் கடை ஒன்றிற்கு செல்ல முச்சக்கரவண்டியை நிறுத்த முற்பட்டவேளை எதிரே நின்ற பொலிசார் அவர்களை சமிக்ஞை செய்து அழைத்துள்ளார்.

எனினும் முச்சக்கரவண்டியை அவ்விடத்தில் நிறுத்த முடியாமையினால் அருகில் உள்ள சந்தியில் நிறுத்திவிட்டு, முச்சக்கரவண்டி சாரதி, பொலிசாரிடம் தமது சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனத்தின் ஆவணங்களையும் காட்டியுள்ளனர்.

அப்போது வீதியில் ஓரத்திற்கு அழைத்த போக்குவரத்து பொலிசார் தவறாக முச்சக்கரவண்டியை திருப்பியதாகவும், நிறுத்தியதாகவும் கூறி லஞ்சம் கோரியதாக முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் தெரிவித்ததுடன் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் அவர்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை தன்வசப்படுத்தி நீதிமன்றத்திற்கு சென்று சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுமாறு பணித்துள்ளார். எனினும் தாம் தவறு செய்யவில்லை எனவும் லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காகவுமே பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை தருமாறுகோரி தாயும் மகனும் வீதியில் இருந்து கோசமெழுப்பினர்.

அப்பொழுது ஒன்று திரண்ட மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வீதியில் நின்று குரல் கொடுத்ததுடன் அவர்களுடன் தாமும் வீதியில் நின்று மறியலில் ஈடுபட்டனர். இதன்போது சிவில் உடையிலும் சீருடையிலும் நின்ற பொலிஸார் அங்கு கூடியிருந்து பொது மக்களை தகாத வர்ர்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி அவ்விடத்தை விட்டு நகருமாறு தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுக்க விடாது பொலிஸார் தடுத்திருந்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திரஜித் தலைமையிலான குழுவினர் சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அவர்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கி அவர்களை வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்ய வருமாறு பணித்தார்.

இதேவேளை, அருகில் அருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் இருந்த முச்சக்கரவண்டிகளையும் அவ்விடத்தில் இருந்து சிவில் உடையில் இருந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் விரட்டியுள்ளனர்.

வீதியோரத்தில் இருந்த கடைகளுக்குள் சென்றவர்களையும் அங்கு பணியாற்றியவர்களயும் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு அங்கிருந்து நகருமாறு பொலிஸார் தெரிவித்ததாக கடை உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.







வவுனியாவில் லஞ்சம் கேட்ட பொலிஸுக்கு எதிராக வீதிமறித்து போராட்டம் (photos) Reviewed by Admin on December 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.