அண்மைய செய்திகள்

recent
-

நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியை இன்று

மறைந்த  தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் வித்துடல் இன்று விதைக்கப்டவுள்ளது.

மண்டேலாவின் சொந்தக் கிராமமான குனுக் கிராமத்தில் இன்று  மரணச் சடங்குகள் இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன..

கடந்’த வாரம் முழுவதும் மண்டேலா ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த தலைநகர் பிறிட்டோரியாவிலுள்ள தொழிற்சங்க கட்டடத்தில் அவரது வித்துடல் அஞ்சலிக்காக   வைக்கப்பட்டிருந்தது.

அஞ்சலி நிகழ்வையடுத்து நெல்சன் மண்டேலாவின் வித்துடல் குனுக் கிராமத்துக்கு விமானத்தின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ள மரணச் சடங்கில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான  மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

உலக தலைவர்கள் சுமார் 4000 பேரும் இந்த சடங்கில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மண்டேலாவின் இறுதி நிகழ்வுக்கு அனுமதி  கிடைக்கவில்லை என தெரிவித்திருந்த தென்னாபிரிக்காவின் கேப் டவுன் முன்னாள் பேராயரான டெஸ்மன் டூட்டு , இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியை இன்று Reviewed by Admin on December 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.