மாங்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு மாங்குளம் பாளப்பானி பகுதியில் அனுமதி பத்திரமின்றி வெடிப்பொருட்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து வெடிபொருள் தயாரிப்பதற்கு தேவையான வெடிமருந்து உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முல்லைதீவு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மாங்குளத்தில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
Reviewed by Admin
on
December 23, 2013
Rating:

No comments:
Post a Comment