பொன்தீவுக்கண்டலில் மீள்குடியேறிவரும் முஸ்ஸிம் மக்களை வட மாகாண சபை உறுப்பினர் சந்திப்பு
பொன்தீவுக்கண்டலில் மீள்குடியேற காத்திருக்கும் முஸ்ஸிம் மக்கள் எதிர் நோக்கும் சிரமங்கள் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியூதினின் வேண்டு கோலுக்கு அமைய மேற்படி கலந்துரையாடல் இடம் பெற்றிருக்கின்றது.
பொன்தீவு கண்டல் பிரதேசத்தில் உள்ள அரச காணியில் மீள் குடியேறுவது தொடர்பில்;
பூவரசன் குளம் முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடியதன் பேரில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் அங்கு மீள்குடியேறும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாத நிலையில் அம்மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்கின்றார்.
இதன் போது மீள்குடியேறிய மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக தங்குமிடம், ஜீவனோபாயம், சுகாதார வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
மேற்படி பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நானாட்டான் பிரதேச செயலகம், முஸ்லிம் எயிட் நிறுவனம், மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடனும் தொடர்பு கொண்டிருப்பதாகவும் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
பொன்தீவுக்கண்டலில் மீள்குடியேறிவரும் முஸ்ஸிம் மக்களை வட மாகாண சபை உறுப்பினர் சந்திப்பு
Reviewed by Admin
on
December 23, 2013
Rating:

No comments:
Post a Comment