அண்மைய செய்திகள்

recent
-

1,083 பட்டதாரிகளுக்கு வடக்கில் நிரந்தர நியமனம்.

வட மாகாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய 1,083 பட்டதாரிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன . யாழ் . மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் யாழ் . மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன . 

 நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் ஆகியோர் இந்த நியமனக் கடிதங்களை வழங்கினர் . 

 கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வட மாகாணத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் கால்நடை , விவசாயம் , பொருளாதார அபிவிருத்தி சார்ந்த திணைக்களங்களிலும் தற்காலிகமாக பணியாற்றி வந்த பட்டதாரிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன .
1,083 பட்டதாரிகளுக்கு வடக்கில் நிரந்தர நியமனம். Reviewed by Admin on December 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.